கோப்பு படம் 
செய்திகள்

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை

நைஜீரியா கடற்பகுதியில் ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

அபுஜா:

ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒரு சரக்கு கப்பல் கடந்த 3-12-2019 அன்று நைஜீரியா கடற்பகுதி வழியாக சென்றபோது அந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் அதில் இருந்த 19 பேரை பிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர்.

கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள் என்ற நிலையில் நைஜீரியா அரசு அதிகாரிகளின் உதவியுடன் அவர்களை மீட்க அங்குள்ள இந்திய தூதரகம் முயற்சித்து வந்தது.

இதன் பலனாக ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து கடத்தப்பட்ட 18 இந்தியர்களும் விடுதலை

செய்யப்பட்டதாக அபுஜா நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையத்தளத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.