செய்திகள்

டொனால்ட் டிரம்ப் ஜப்பான் வருகை: டோக்கியோ நகரில் உச்சகட்ட பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் வருகையையொட்டி அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவில் சுமார் 18 ஆயிரம் போலீசார் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபடுத்தபபட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 5-ம் தேதி அரசு முறைப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு வருகிறார். அவரது வருகைக்கு முன்னர் டிரம்ப்பின் மகளும் அரசியல் ஆலோசகருமான இவான்க்கா டிரம்ப் இன்று (வெள்ளிக்கிழமை) டோக்கியோ நகரை வந்தடைந்தார்.

அவருக்கு சீருடை அணியாத பெண்கள் சிறப்பு போலீஸ் படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் வருகையையொட்டி டோக்கியோ நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பெட்டகங்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 ஆயிரம் போலீசார் அடங்கிய சிறப்பு ரோந்துப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு அந்நாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா டோக்கியோ நகருக்கு வந்தபோது சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த 2002-ம் ஆண்டு அந்நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் டோக்கியோ நகருக்கு வந்தபோது சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT