தலிபான் பயங்கரவாதிகள் 
செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவம் - தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 16 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்ஹார் மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.