செய்திகள்

முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது

முத்தியால்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது57) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தும்படி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தாவிடம் புகார் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தும் படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அபூர்வாகுப்தா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது உதயகுமார் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.