திருப்பூர்:
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். திருப்பூரில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் 50 நாட்கள் ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் பரிசோதனை கூடங்களில் பயன்படுத்திய பொருட்களின் மருத்துவ கழிவு சேகரமானது. இதனை அகற்றி பத்திரமாக அழிக்க தனியார் நிறுவனம் ஆஸ்பத்திரியுடன் இணைந்து செயல்பட்டது. அதன்படி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரை 1,500 கிலோ மருத்துவக்கழிவுகள் சேகரிப்பட்டது.
மருத்துவக்கழிவுகள் சேகரிக்க வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் என்று வகைப்படுத்தப்பட்டது. இதில் ஊசி, உடைந்த பொருட்கள், திசு, சளி, ரத்தமாதிரிகள், டாக்டர்கள் பயன்படுத்திய மாஸ்க், கையுறை, முழு கவச உடை, நோயாளிகள் பயன்படுத்திய மாஸ்க், துணி உள்ளிட்டவைகள் அடங்கும்.
சேகரிக்கப்பட்ட 1,500 கிலோ டன் மருத்துவ கழிவுகள் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பப்பட்டன. இங்கு 1,500 கிலோ மருத்துவக்கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.