மரணம் 
செய்திகள்

விழுப்புரத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலி- போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

திருவெண்ணெய்நல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்தது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை கட்டிப்போட்டு எரித்ததாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இது தொடர்பாக சிறுமியிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.