செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுகாயங்களுடன் 15 பேரின் உடல்கள் மீட்பு

பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மாலை மலர்

குவெட்டா:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி உள்ள புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கி குண்டு காயங்களுடன் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு ஒரு சில ஆவணங்களும் கிடைத்தன.

அவர்கள் 15 பேரும், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்து உள்ளனர் என்பது அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது. இவர்கள் 15 பேரும் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் போலீசில் வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.