செய்திகள்

தந்தையை கோடாரியால் தாக்கி 14 வயது மகள் பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்புரில் தந்தையை கோடாரியால் தாக்கி அவரது 14 வயது மகளை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா:

இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்று வீடு திரும்பிய 14 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், காப்பாற்ற முயன்ற தந்தையையும் கோடாரியால் தாக்கி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறுகையில், 'ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்ற பெண் தன் தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தன் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையையும் அக்கும்பல் கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆனந்த்குமார், சஞ்சய் மற்றும் சந்த்பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம். மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற்ற பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.

இந்தியாவில் தொடரும் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT