செய்திகள்

காஷ்மீரில் தொடர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்: இந்திய வீரர்கள் 13 பேர் படுகாயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தியதில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் படுகாயமடைந்தனர்.

மாலை மலர்

காஷ்மீர் மாநிலத்தில் தேசிய எல்லையில் தொடர்ந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், நான்கு நாட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டன. 4 மணிநேரங்களில் காஷ்மீரின் தெற்கு பகுதியில் 4 முறையும், வடக்கு பகுதியில் ஒரு முறையும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது, ரம்ஜான் பண்டிகையின் 17-ஆம் நாளான நேற்று மாலை சுமார் 6.25 மணியளவில் இந்திய எல்லைக்குள் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். ஆனால் பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடிவடிக்கை எடுத்திருந்ததால் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய நிலைகளின் மீது, தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் துணைராணுவப் படை வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

மற்றுமொரு தாக்குதலில், அனந்நாக் மாவட்டத்தில் உள்ள அஞ்சிதோரா பகுதியில் வசித்து வரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு போலீசார் காயமடைந்தனர்.