கோப்புபடம் 
செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் - 13 பேர் கைது

சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கடையை அகற்றக்கோரியும் மக்கள் அரசு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கடையை அகற்றக்கோரியும் மக்கள் அரசு கட்சியினர் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் பலர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். 

திடீரென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் 8 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.