கைது 
செய்திகள்

வடவள்ளி அருகே 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தை கைது

வடவள்ளி அருகே 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை சுண்டபாளையம் பகுதியை சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளிக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சிறுமி படிக்கும் பள்ளியில் கடந்த வாரம் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழச்சி முடிந்ததும் தனது வகுப்பு ஆசிரியையை சந்தித்த சிறுமி தனது தந்தை தனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறினார்.

இது குறித்து வகுப்பு ஆசிரியை சிறுமிக்கு அவரது தந்தையால் நடந்த கொடுமை குறித்து தாயிடம் கூறினார். சிறுமியின் தாய் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.