மாயம் 
செய்திகள்

திருச்சியில் 11-ம் வகுப்பு மாணவர் மாயம்

திருச்சியில் வீட்டை விட்டு வெளியே சென்ற 11-ம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவரை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

திருச்சி தஞ்சாவூர் ரோடு ஏ.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் செல்வேந்திரன் (வயது 15). திருச்சி ஈ. ஆர். மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி காலை 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் செல்வேந்திரன் தனது வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதில் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அருகில் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் எங்கு எங்கு தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் செல்வேந்திரனை தேடி வருகின்றனர்.