மீட்புப் பணியில் போலீசார் 
செய்திகள்

கர்நாடகம் - தனியார் பேருந்து, சரக்கு லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி

கர்நாடகம் மாநிலத்தில் தனியார் பேருந்து, சரக்கு லாரி மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள முருகுமல்லா பகுதி அருகில் தனியார் பேருந்தும், சரக்கு லாரியும் இன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT