விபத்து - கோப்புப்படம் 
செய்திகள்

பாகிஸ்தானில் கால்வாயில் வேன் விழுந்து 11 பேர் பலி

பாகிஸ்தானில் கால்வாயில் வேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியானார்கள்.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், பக்கத்து நகரில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக, கடந்த 8-ந் தேதி இரவு, வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வேன், அருகில் இருந்த கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் மறுநாள் மீட்புபடையினர் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரோட்டத்தில் சிலரது உடல்கள் நீண்ட தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு இருந்தன. மிக நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினர் போராடி 11 உடல்களை மீட்டனர். ஒருவரது உடல் சிக்கவில்லை.  வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களில் 2 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகளும் அடங்குவர்.