செய்திகள்

சென்னையில் குண்டர் சட்டத்தில் 11 பேர் கைது

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 11 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார், அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் (வயது36), பெரும்பாக்கத்தை சேர்ந்த சிவா (37), திரிசூலத்தை சேர்ந்த ஆனந்த் என்ற ஆனந்தராஜ் (25), மதுரவாயலை சேர்ந்த முருகன் (27), தண்டையார் பேட்டை சரவணன் (31), பெருங்குளத்தூர் மோகன் ராஜ் என்ற துப்பாக்கி மோகன் (31) ஆகியோர் சமீபத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தண்டையார் பேட்டையை சேர்ந்த திருநீர்மலை (28), தமிழரசன் (28), மீஞ்சூர் பகவதி (25), பழைய வண்ணாரப்பேட்டை பால சரத்குமார் (28), அசோக் (25) ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் மகேஷ் மீது கொலை முயற்சி உள்பட 4 வழக்குகள் உள்ளது. சிவா மீது 15 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. ஆனந்த் மீது கொலை முயற்சி மற்றும் 2 வழிப்பறி வழக்குகளும், முருகன் மீது 2 திருட்டு வழக்குகளும் உள்ளன.

சரவணன், மோகன்ராஜ், திருமலை, தமிழரசன், பசுபதி ஆகிய 5 பேர் மீது ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளன. பாலசரத்குமார், அசோக் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 11 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் 11 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.