தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் கீழானூர் பகுதியை சேர்ந்த வீராசாமி (வயது19) என்பவரும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர் வீராசாமி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதனை பார்த்து மாணவியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வீராசாமி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான வீராசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.