மரணம் 
செய்திகள்

காரிமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்

காரிமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். என்ன காரணத்திற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள மேல்சவுளுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் மணிமேகலை (வயது16). இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் அவர் சாப்பிட்டு படுத்து தூங்கினார். பின்னர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் மணிமேகலை பிணமாக கிடந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த மணிமேகலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிமேகலை காதல் பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? அல்லது அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.