திருப்பந்தூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனத்தில் மோட்டாருக்கு வட்டாட்சியர் விஜயகுமாரி ‘ச 
செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 103 குடிநீர் கம்பெனிகளுக்கு சீல்

திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடிநீர் கம்பெனிகள் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 103 குடிநீர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீர் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 27-ந்தேதி முதல் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொடங்கி உள்ளனர்.

இன்றும் 6-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவு குடிநீர் கேன் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.

அவை முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோட்டாட்சியர்கள் மேற்பார்வையில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடிநீர் கம்பெனிகள் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து மொத்தம் 103 குடிநீர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திருப்பந்தூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட நிறுவனத்துக்கு கோட்டாட்சியர் வித்தியா மேற்பார்வையில் வட்டாட்சியர் விஜயகுமாரி தலைமையிலான வருவாய் ஊழியர் கள் ‘சீல்’ வைத்தனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.