மழை 
செய்திகள்

மதுராந்தகத்தில் 102 மி.மீட்டர் மழை

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. மதுராந்தகத்தில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாலை மலர்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மதுராந்தகத்தில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காஞ்சிபுரம் - 12.40

ஸ்ரீபெரும்புதூர் - 41

உத்திரமேரூர் -  23.50

வாலாஜாபாத் - 22

திருப்போரூர் -  14.30

செங்கல்பட்டு - 49

திருக்கழுக்குன்றம் -  28

மகாபலிபுரம் - 63

செய்யூர் - 29.60

தாம்பரம் -  29

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 98. மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீ.) வருமாறு:-

கும்மிடிப்பூண்டி - 92

பள்ளிப்பட்டு - 28

ஆர்.கே.பேட்டை - 11

பொன்னேரி - 75

செங்குன்றம் - 82

செம்பரம்பாக்கம் 93

ஜமீன் கொரட்டூர் - 81

பூந்தமல்லி - 66

திருவாலங்காடு - 53

திருத்தணி - 54

பூண்டி - 72

தாமரைப்பாக்கம் - 77

திருவள்ளூர் - 75

ஊத்துக்கோட்டை - 60