இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மேலும் இந்த வருடத்தில் டெஸ்டில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
இந்த சதம் மூலம் 22 சதங்களை அதிவேகமாக அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டான் பிராட்மேன் 58 இன்னிங்சில் 22 சதங்கள் அடித்துள்ளார். இந்திய டெஸ்ட் ஜாம்பவான் கவாஸ்கர் 101 இன்னி்ங்சில் அடித்துள்ளார். தற்போது ஸ்மித் 108 இன்னிங்சில் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் 114 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தில் உள்ளார்.