செய்திகள்

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

மத்தியப்பிரேதேசம் மாநிலம் போபாலில் 10 வயது சிறுமியை 3 மாத காலமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்த 10 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த சுமான் சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அவர் வீட்டில் இருந்த மேலும் இரண்டு பேருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


பின்னர் யாரிடமும் இதைக் கூறக்கூடாது என மிரட்டி 3 மாத காலமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். மகளின் செயலில் மாற்றத்தைக் கண்ட அம்மா விசாரித்துள்ளார். அவரிடம் நடந்த எல்லாவற்றையும் விவரமாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நான்கு நால், கோகுல் பன்வாலா மற்றும் கியாந்திரா பண்டிட் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. அதனை எடுக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.