செய்திகள்

பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு- நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வேலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு பூட்டு போட்ட நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்:

வேலூர் பாகாயம் மெயின் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் நாம் தமிழர் கட்சி அணைக்கட்டு தொகுதி பொறுப்பாளர் சிவா தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிமாறன், விஜயகுமார் உள்பட 10 பேர் வந்தனர். அவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு திடீரென பூட்டு போட்டனர். பின்னர் அலுவலகம் வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் கைது செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

SCROLL FOR NEXT