மதுரா:
சமூக இணைய தளத்தில் மதத்திற்கு எதிராக ஆட்சேபிக்கத்தக்க கருத்தை வெளியிட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவின் கோவிந்த் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காச்சி சடக் பகுதியில் வசித்து வருபவர் சாயிஃப் கான். இவர் சமூக இணைய தளத்தில் மதத்திற்கு எதிராக ஆட்சேபிக்கத்தக்க கருத்தை வெளியிட்டதாக ஷிவேந்த்ரா என்பது புகார் அளித்தார்.
இதனடிப்படையில் போலீசார் சாயிஃப் கானை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.