நீங்கள் 'லெக்கின்ஸ்' அணிபவரா? அப்படியானால், பின்வரும் விஷயங்களை கவனத்தில்கொள்ளுங்கள்...
* லெக்கின்ஸ் அணியும்போது, குட்டி டாப்ஸ் போடுவது சரியல்ல. லெக்கின்ஸ் அணிகையில் எப்போதும் இடுப்புக்குக் கீழே அல்லது முழங்கால் வரை நீண்டிருக்கும் குர்தி அல்லது நீளமான டாப்சை தேர்ந்தெடுப்பது கண்ணியமான தோற்றத்தைத் தரும்.
* மிக மெல்லிய துணியால் ஆன லெக்கின்சை தவிருங்கள். தடிமனான, நல்ல தரமான துணியைத் தேர்வு செய்வது அவசியம்.
* லெக்கின்ஸ் உடலோடு ஒட்டி இருப்பதால், உள்ளாடைகளின் விளிம்புகள் தடிப்பாக தெரியாதவாறு 'சீம்லெஸ்' வகையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
* கருப்பு, அடர்நீலம் அல்லது மெரூன் போன்ற அடர்நிற லெக்கின்ஸ், கால்களை ஸ்லிம்மாக காட்ட உதவும். பிரகாசமான நிறங்களை விட இவை எல்லா வகை டாப்சுக்கும் பொருந்தும்.
* லெக்கின்சுக்கு பிளாட் செருப்புகள், பெல்லி ஷூக்கள் அல்லது கோலாப்பூரி செருப்புகள் மிக அழகான, வசதியான தோற்றத்தைக் கொடுக்கும்.
* மிகக் குட்டையான டீ-ஷர்ட் அல்லது கிராப் டாப்சை லெக்கின் சுடன் தவிர்ப்பது, தேவையற்ற பார்வைகள் விழாமல் தடுக்கும்.