ஆரோக்யம்

விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை நெருங்க முடியாது

விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை ஒருபோதும் நெருங்க முடியாது. தோல்வியை எதிர்கொள்பவர்கள் மற்றவர்களின் விமர்சனங்களை கேட்டு மனம் தளர்ந்து போய்விடக்கூடாது.

உங்களின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்காமல் அலட்சியம் செய்தாலும் கவலைப்படக்கூடாது. தோல்வி மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்கும். தொடர் வெற்றிகளை குவிப்பவர்களை தூக்கி வைத்து கொண்டாடும். தோல்வியும், வெற்றியும் நிரந்தரமானதல்ல. இன்று வெற்றியை குவிப்பவன் அதை தக்க வைத்து கொள்ள தவறி, வெற்றி மமதையில் உலா வந்தால் விரைவில் தோல்வி அவனை குடிகொண்டு விடும்.

ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் துவள வேண்டியதில்லை. நம்பிக்கை விதைகளை விதையுங்கள். நிச்சயம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். வெற்றி பெறுபவன் உழைக்கும் நேரத்தை விட இருமடங்கு உழையுங்கள். சோம்பலை துரத்தி சுறுசுறுப்போடு சுழலுங்கள். முந்தைய தோல்வியை பற்றி சிந்தியுங்கள். அதில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மனதில் நிலை நிறுத்தி வெற்றிக்காக போராடுங்கள்.