ஆரோக்கியம்

30 வயதை கடந்த பெண்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி

30 வயதை கடந்த பெண்கள் இந்த நிபந்தனைகளை கடைபிடித்தால் உங்கள் சருமம் சுருக்கங்கள் மற்றும் முதிர்ந்த தோற்றம் இல்லாமல் இளமை பொலிவோடு இருக்கும்.

மாலை மலர்

1, ரெடினாய்டு, சரும பராமரிப்பில் வெளிப்புற இணைப்புத்திசுக்களை (Collagen) மற்றும் தோல் திசுக்களை (Skin Cells) புதிதாக உற்பத்தி செய்கிறது. நீங்கள் 30 வயதானவராக இருந்தால் உங்கள் சரும பராமரிப்பு முறைகளில் கண்டிப்பாக ரெடினாய்டு உபயோகியுங்கள். நீங்கள் ரெடினாய்டு உள்ளடங்கிய சரும பராமரிப்பு சாதனங்களை தேர்ந்தெடுங்கள். ரெடினாய்டு ஒரு சிறந்த முகப்பரு தடுப்பானாக செயல்படுகிறது. இது சருமச் சுருக்கங்கள் வராமல் தடுப்பதோடு முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. மேலும் இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

2. உங்கள் சருமம் வயதான தோற்றமடைய காரணம் சருமத்தில் வறட்சியே. எனவே நீங்கள் கட்டாயமாக சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க வேண்டும். அதனால் நீங்கள் முப்பது வயதடைந்ததும் சருமத்திற்கு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதை அதிகரிக்கவும். சரும மாய்ஸ்ட்ரைசர்களுக்கு நீங்கள் எடுத்து கொள்ளும் இடைவெளி மிகக் குறைவானதாகவும் எப்போதும் உங்கள் சருமம் நீர்ச்சத்துடை உடையதாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பயணங்களின் போதும் கண்டிப்பாக மாய்ஸ்டரைசரை பயன்படுத்த வேண்டும்.

3. நீங்கள் முப்பது வயதை அடைந்திருக்கும் போதே உங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பயனுள்ளவைகளை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சரும பராமரிப்பு பொருட்களையே மேலும் தொடர்ந்தால் உங்கள் சருமத்திற்கு தேவையான போஷாக்கு கிடைக்காது, அதனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களில் முதிர்ந்த தோற்ற்றத்தை தடுக்கும் மூலக்கூறுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உயர் ரக பிராண்டுகளில் உள்ள சரும பராமரிப்பு பொருட்களில் சரும முதிர்ச்சியை தடுக்கும் பொருட்களை நீங்கள் உபயோகிக்கலாம்.

4. அதிக உறக்கம் இளமையான சரும தோற்றத்தை கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சருமத்தின் முதிர்ச்சியை தடுக்க எனும்போது தூக்கத்திற்கான நேரத்தோடு நீங்கள் உறங்கும் தோற்றமும் மிக முக்கியம். சரும முதிர்ச்சியடையும் வயதுக்குப்பின் நீங்கள் உங்கள் முகத்தை தலையணையில் வைத்து குப்புறப்படுத்தவாறு உறங்குவதால், தலையணையில் முகம் அழுந்தி உங்கள் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். அடுத்து தலையணையிலுள்ள நுண்ணிய அழுக்குகள் உங்கள் சருமத்தின் உள்ளே ஊடுருவி எதிர்மறையான முடிவுகளை தருவதற்கும் வாய்ப்புள்ளது.

5. வயது முதிர்ச்சியையும் பாலின வேறுபாட்டையும் தாண்டி சூரியனின் புற ஊதாக்கதிர்கள் எப்போதுமே உங்கள் சருமத்திற்கு கெடுதல் தரக்கூடியது தான். சரும முதிர்ச்சியை தடுக்கும் சரும பராமரிப்பு முறைகளை தொடங்கியிருப்பின் அதிகமாக வெயிலில் செல்வதை தவிருங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் நிலையான இளமைப்பொலிவோடும், சரும நிறம் மாறாமலும் இருக்கும். முப்பது வயதிற்கு மேல் வீட்டிலேயோ அல்லது அலுவலங்களிலோ உள்ளேயே இருந்து வேலை செய்வதை அதிகப்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கும்
 
6 உடலில் வயதான தோற்றத்தை முதலில் எடுத்துக்காட்டுவது கண்களும் அதன் சுற்றுப்புறமும் தான் சொறி போன்ற அலர்ஜியான கண்ணிமைகள் அல்லது காக்கைச்சுவடு போன்ற கண்ணிமை கோளாறுகள் கண்ணைச் சுற்றியுள்ள சருமத்தை மிகவும் பலவீனமாகவும் சுருக்கங்கள் உடையதாகவும் மாற்றுகிறது. இதற்கு கண்களுக்கு பிரத்யேகமான அதிக பயன்களுடைய சரும முதிர்ச்சி தடுக்கும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிப்பது சிறந்த தீர்வாகும். சாதாரண சரும பராமரிப்பு பொருட்கள் கண்களை சுற்றி சரியாக வேலை செய்யாது காரணம் அது உடலின் மிக மென்மையான பகுதியாகும். இதற்காக நீங்கள் கண் மருத்துவர் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்களுக்கு பிரத்யேகமான சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்கவும்.