ஆரோக்கியம்

நீர்சத்து நிறைந்த வெள்ளை பூசணிக்காய் சாலட்

வெள்ளை பூசணிக்காயில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து, வைட்டமின் பி1, பி3, சி நிறைந்துள்ளன. கோடைக்காலத்தில் பூசணிக்காயை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

மாலை மலர்

வெள்ளைப் பூசணி - பெரிய துண்டு,
நிலக்கடலை - 1 கைப்பிடி,
பச்சைமிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
உப்பு, மிளகு - தேவையான அளவு,கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை :

* வெள்ளை பூசணியை சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நிலக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் சதுரமாக வெட்டிய வெள்ளைப் பூசணித் துண்டுகளோடு, நிலக்கடலையைப் போட்டுக் கலக்க வேண்டும்.

* அடுத்து அதில் பச்சைமிளகாய், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லியைக் கலந்து பரிமாறவும்.