ஆரோக்கியம்

சத்தான சுவையான கோதுமை ரவை ஊத்தப்பம்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை ரவையில் ஊத்தப்பம் செய்முறையை பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்

தயிர் - 1 கப்

இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும்.

வறுத்த கோதுமை ரவையை ஒரு பௌலில் போட்டு, தயிர், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பௌலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி ரவை மாவை ஊற்றி, லேசாக தேய்த்து, பின் அதன் மேல் வெங்காய கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, வெந்ததும் கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை ரவை ஊத்தப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.