ஆரோக்கியம்

சத்து நிறைந்த கோதுமை - கொத்தமல்லி தோசை

கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கோதுமை மாவுடன் கொத்தமல்லி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு - முக்கால் கப், 

அரிசி மாவு - கால் கப், 

ரவை - அரை கப், 

புளித்த மோர் - ஒரு கரண்டி, 

சீரகம் - ஒரு டீஸ்பூன், 

வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, 

இஞ்சி - சிறு துண்டு, 

கொத்தமல்லி - தேவையான அளவு,  

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, 

எண்ணெய் - கால் கப், 

உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். 

அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும். சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

அருமையான கோதுமை - கொத்தமல்லி தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.