ஆரோக்கியம்

சூப்பரான சத்தான வரகரிசி தயிர் சாதம்

சிறுதானியங்களில் வரகு அரிசி மிகவும் சத்து நிறைந்தது. இன்று வரகு அரிசியை வைத்து தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

வரகரிசி - 1 கப்

தண்ணீர் - 3 1/2 கப்

தயிர் - 1 1/2 கப்

உப்பு, எண்ணெய் - தேவையானது

கொத்தமல்லி - சிறிதளவு

அரைக்க :

சீரகம் - 1 தேக்கரண்டி

தயிர் - 1 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 1

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு தட்டில் போட்டு ஆற விடவும்.

சீரகம் தயிர், ப.மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

அரைத்த விழுதை சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான வரகரிசி தயிர் சாதம் ரெடி.

'

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.