ஸ்வீட் கார்ன் - 100 கிராம்,
பன்னீர் - 50 கிராம்,
உருளைக்கிழங்கு - 2,
முந்திரி விழுது - சிறிதளவு,
தக்காளி - 100 கிராம்,
வெங்காயம் - 2,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3, கரம்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி இலை - சிறிதளவு,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
பன்னீரை உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, உதிர்த்த பன்னீர், கொரகொரப்பாக ஸ்வீட் கார்னை சேர்த்து அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, கொத்தமல்லி இலை, மைதா, [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்…
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து இஞ்சி - பூண்டு விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், தக்காளி விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பிறகு, முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சூப்பரான ஸ்வீட் கார்ன் பன்னீர் கோஃப்தா ரெடி.