ஆரோக்கியம்

சானிட்டரி நாப்கின் - கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது அவசியமாகும்.
 
பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.