ஆரோக்கியம்

சத்தான சிவப்பரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

வயிறு கோளாறு, வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது. இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று இன்று பார்க்கலாம்.

மாலை மலர்

சிவப்பு அரிசி - ஒரு கப்,
முதல் தேங்காய்ப் பால் - அரை கப்,
இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்,
பூண்டு - 15 பல்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
சுக்கு - சிறிய துண்டு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

சிவப்பரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

சிவப்பரிசி நன்றாக ஊறியதும் அதை குக்கரில் போட்டு அதனுடன் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மத்தால் சற்று கடையவும்.

பிறகு அதனுடன் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.