சிவப்பு அவல் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி அலசி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் அவலை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான அவல் பிசறல் ரெடி.