ஆரோக்கியம்

குழந்தைகள் விரும்பும் சிவப்பு அவல் பிரியாணி

சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலை வைத்து சத்தான சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

சிவப்பு அவல் - 2 கப்
வெங்காயம் - 1
கேரட், பீன்ஸ் துண்டுகள் - அரை கப்
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 3
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
பட்டை - சிறு துண்டு
சோம்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது.

செய்முறை :

அவலைச் சுத்தம் செய்து, தண்ணீர் வடித்துப் பத்து நிமிடம் ஊறவையுங்கள்.

காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள்.

தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேகவிடுங்கள்.

காய்கள் வெந்ததும் அவலைப் போட்டுக் கிளறுங்கள்.

அவல் உதிரியாக வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.

ஐந்தே நிமிடங்களில்ல் சுவையான சிவப்பு அவல் பிரியாணி தயார்.