ராஜ்மா - 1 கப்
தக்காளி - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
செய்முறை :
ராஜ்மாவை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பிறகு ராஜ்மாவுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் துருவி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ராஜ்மா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்க்கவும்.
மசாலா கெட்டியானதும் கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான ராஜ்மா மசாலா ரெடி.