கோதுமை மாவு - 1கப்
ராகி மாவு - அரை கப்
புதினா - அரை கப்
உப்பு - தேவைக்கு
சூடான தண்ணீர் - தேவைக்கு.
செய்முறை :
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, உப்பு, பொடியாக நறுக்கி புதினாவை போட்டு நன்றாக கலந்து சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் மென்மையாக பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான கோதுமை - ராகி புதினா சப்பாத்தி ரெடி.