கோதுமை மாவு - 2 கப்,
முள்ளங்கி துருவல் - கால் கப்,
பூசணி துருவல் - அரை கப்,
பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை:
முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும்.
பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும்.
கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது, [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும்.
மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி - பூசணி சப்பாத்தி ரெடி.
இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.