ஆரோக்கியம்

சமைக்காமல் செய்யலாம் பூசணிக்காய் சூப்

தினமும் சூப் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பூசணிக்காயை வைத்து சமைக்காமல் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

பூசணிக்காய் - 1 கப்,
தக்காளி - 1,
பாலக்கீரை - 5 முதல் 10 வரை (இலையின் அளவை பொறுத்து)
உப்பு - தேவைக்கேற்ப,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி இலை - சிறிது.

செய்முறை :

பூசணிக்காய், தக்காளி, கொத்தமல்லி, பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பூசணிக்காய், தக்காளி, பாலக்கீரையை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்தை, வடிகட்டி அதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பருகலாம்.

இந்த சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.