ஆரோக்யம்

பனிவரகு - கொண்டைக்கடலை சாலட்

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பனிவரகு, கொண்டைக்கடலை வைத்து சலாட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த பனி வரகு - அரை கப்,

தக்காளி - 1

வெங்காயம் - 1

கேரட் - ஒன்று,

வேகவைத்த கொண்டைக்கடலை - கால் கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

எலுமிச்சைச் சாறு - ஒரு மேஜைக்கரண்டி,

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி,

ஆலிவ் ஆயில் - 1 தேக்கரண்டி,

புதினா - சிறிதளவு.

செய்முறை:

கேரட், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, தக்காளி, வெங்காயம், கேரட், வேகவைத்த பனிவரகு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக இதில், எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஊற்றிக் கலக்கி, புதினா தூவி, பரிமாறவும்.

சத்தான பனிவரகு - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.