ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு மசாலா பூரி

பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பூரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

செய்முறை :
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ரவை, உப்பு, சாட் மசாலா, சீரகம், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், கொத்தமல்லி, பேக்கிங் பவுடர், ஓமம் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை பூரிகளாக உருட்டிவைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள பூரியை ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா பூரி ரெடி.