ஆரோக்கியம்

சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்

தினமும் ஏதாவது ஒரு வகை சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வேர்க்கடலை சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச் சாறு, [பாட்டி மசாலா] மிளகு தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

கடைசியாக அதன் மேல் கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி.

வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.