பச்சரிசி - ஒரு கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வறுத்த வேர்க்கடலை - கால் கப்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை :
பச்சரிசியை உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து வடித்து கொள்ளவும்.
வேர்க்கடலையை தோல் நீக்ககி வையுங்கள்.
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு ஒன்றாக சிவக்க வறுத்து, அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்தில் சேர்த்து, அத்துடன் நெய், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
வேர்க்கடலை மணத்துடனும் வித்தியாசமான சுவையுடனும் அசத்தும் இந்த புதுமையான சாதம்.