ஆரோக்கியம்

சத்து நிறைந்த பாலக் - கேரட் தோசை

பாலக்கீரை, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சுவையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் : 

தோசை மாவு - ஒரு கப், 

பாலக்கீரை - ஒரு கப், 

கேரட் - 2, 

சீரகம் - ஒரு டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

எண்ணெய் - தேவையான அளவு, 

உப்பு - சிறிதளவு.

செய்முறை : 

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பாலக்கீரை வெந்ததும் ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். 

தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும். 

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

சூப்பரான பாலக் - கேரட் தோசை ரெடி. 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.