ஆரோக்கியம்

இருமலுக்கு தீர்வு தரும் ஓமவல்லி துளசி டீ

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த ஓமவல்லி துளசி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

ஓமவல்லி இலைகள் - 5,  
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.

செய்முறை :

ஓமவல்லி இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன் விட்டு பருகலாம்.