அழகுக் குறிப்புகள்

ட்ரெண்டிங் ஃபேஷன்: பெண்களின் மனதைக் கவரும் 'பிரேஸ்லெட்'!

வளையல் போல அளவு தெரிய வேண்டுமே என்ற கவலை இதில் இல்லை.

இன்றைய காலகட்ட பெண்களின் ஆடை உடுத்தும் முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு ஆபரணங்கள் மீதான ஆர்வம் மட்டும் எப்போதும் குறைந்ததே இல்லை.

குறிப்பாக, நவீன கால இளம் பெண்கள் மத்தியில் 'பிரேஸ்லெட்' அணிவது ஒரு முக்கிய ஃபேஷன் அடையாளமாக மாறியுள்ளது.

வளையல் டூ மாடர்ன் பிரேஸ்லெட்ஸ்:

வளையல்களைப் போல உடைந்துவிடும் ஆபத்தோ அல்லது கைகளில் காயத்தை ஏற்படுத்தும் தன்மையோ பிரேஸ்லெட்டுகளில் இல்லை.

ஒரே பிரேஸ்லெட்டை யார் வேண்டுமானாலும் தங்களின் கை அளவுக்கு ஏற்ப மாற்றி அணிந்து கொள்ளும் 'அட்ஜஸ்டபிள்' வசதி இதில் உள்ளது. சமையல், கணினி வேலை, வாகனம் ஓட்டுதல் போன்ற தினசரி பணிகளின் போது இது எந்த இடையூறும் தருவதில்லை.

எளிமையாகவும், அதே சமயம் பிரம்மாண்டமாகவும் காட்டும் வித்தை இந்த பிரேஸ்லெட்டுகளுக்கு மட்டுமே உண்டு.

பிரேஸ்லெட் வகைகள்

தற்போதைய கலாசாரத்தில் பல வகையான டிசைன்கள் இவர்கிறது. தங்களுக்கு பிடித்ததையே தாங்களே அலங்கரித்து கூட பெண்கள் அணிகிறார்கள்.

நினைவுச் சின்ன காப்புகள் தங்களுக்குப் பிடித்த குட்டி குட்டி பொம்மைகள், லவ் சிம்பல், அல்லது நட்சத்திர வடிவங்களை கோர்த்து உருவாக்குவது. வளையல் வடிவ பிரேஸ்லெட் பாரம்பரிய வளையல் போல தோற்றமளிக்கும், ஆனால் ஓப்பனிங் லாக் கொண்ட நவீன வடிவமைப்பு.

மெல்லிய சங்கிலிகள் அலுவலகம் செல்லும் பெண்கள் அதிகம் விரும்பும் ஒற்றை இழை கொண்ட மெல்லிய வெள்ளி அல்லது தங்க சங்கிலிகள். பாசிமணிக் காப்புகள் கல்லூரி மாணவிகளின் ஃபேவரைட் சாய்ஸ். வண்ணமயமான கற்கள் மற்றும் மரப்பாசிகளால் ஆனவை.

அகலமான காப்புகள் புடவை அல்லது பார்ட்டி உடைகளுக்கு ராயல் லுக் தரும் அகலமான மெட்டல் காப்புகள் இது போன்ற பல்வேறு விதமான பிரேஸ்லெட்களை பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.

உளவியல் ரீதியான காரணங்கள்

தனித்துவத்தின் அடையாளம் ஒவ்வொரு பெண்ணும் தங்களின் ரசனைக்கு ஏற்ப பிரேஸ்லெட்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.

இது அவர்களின் தனித்துவமான குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. நெருக்கமான நினைவுகள் நெருங்கியவர்கள் கொடுத்த பரிசு அல்லது தங்களின் சொந்த உழைப்பில் வாங்கிய முதல் ஆபரணம் என உணர்வுபூர்வமான நினைவுகள் இதனுடன் இணைக்கப்பட்டு உளவியல் ரீதியான காரணங்களாகவும் வெளிப்படுத்துகின்றனர்.

டிரெண்டிங்

ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் அமேசான், மின்த்ரா போன்ற தளங்களில் பெண்களுக்கான பிரேஸ்லெட் தேடல்கள் கடந்த ஆண்டை விட 45% அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

ஆன்டி-டார்னிஷ் மேனியா தண்ணீரில் பட்டாலும் நிறம் மாறாத, துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேஸ்லெட்டுகளுக்குத் தற்போது சந்தையில் மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது.

'கிஃப்ட்டிங்' சாய்ஸ்

தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளிக்கும் போது யார்வேண்டுமானாலும் காதலி, மனைவி, தங்கை அல்லது தோழி என யாருக்குப் பரிசளிக்க வேண்டும் என்றாலும், மிக எளிதான மற்றும் சிறந்த தேர்வாக பிரேஸ்லெட் மட்டுமே இருக்கிறது. வளையல் போல அளவு தெரிய வேண்டுமே என்ற கவலை இதில் இல்லை.

எளிமை, அழகு, சௌகரியம் ஆகிய மூன்றின் கலவையாக இருக்கும் பிரேஸ்லெட்டுகள், பெண்களின் கைகளை மட்டுமல்லாமல் அவர்களின் மனதையும் முழுமையாகக் கவர்ந்துள்ளன என்பதுதான் தற்போதைய ஃபேஷன் உலகின் நிதர்சனம்.