அழகுக் குறிப்புகள்

புடவையை அழகாக்கும் 'ஃபேஷன் சீக்ரெட்': பெண்களைக் கவரும் டாப் 5 ட்ரெண்டிங் புடவை பின்கள் (புரோச்கள்)!

ஒரு ரூபாய் சேஃப்டி பின்னில் இருந்து பிராண்டட் புரோச் வரை புடவை பின்களின் பரிணாமம் அழகு.

இந்தியப் பெண்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்குவது புடவை. ஒரு பெண் புடவை அணியும் போது அவளது அழகு பல மடங்கு கூடுகிறது. ஆனால், அந்தப் புடவை கலைந்துவிடாமல் நேர்த்தியாகவும், அதே நேரத்தில் கம்பீரமாகவும் காட்டுவதில் 'புடவை பின்கள்' மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

முன்பெல்லாம் புடவையின் முந்தானையை மடித்துக் குத்துவதற்கு சாதாரண சேஃப்டி பின்களையே பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இன்று, புடவை பின்கள் என்பது வெறும் பாதுகாப்பிற்கான ஒரு கருவி மட்டுமல்ல; அது ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆடம்பரத்தையும், ரசனையையும் வெளிப்படுத்தும் மிக முக்கியமான 'ஃபேஷன் அஸ்சஸரி' ஆக மாறிவிட்டது.

சந்தையில் தற்போது பெண்களை அதிகம் கவர்ந்து வரும் டாப் 5 புடவை பின் டிசைன்கள்.

பாரம்பரிய விழாக்களுக்கான பிரம்மாண்ட 'அன்னப் பறவை' மற்றும் 'மயில்' டிசைன்கள்:

பாரம்பரிய பட்டுப்புடவைகளுக்கு கூடுதல் கம்பீரத்தையும் ராயல் தோற்றத்தையும் சேர்க்க அன்னப் பறவை மற்றும் மயில் வடிவ டிசைன்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கின்றன. இவை தூய தங்க முலாம் பூசப்பட்டு , கண்ணைக் கவரும் கெட்டி கற்கள், முத்துக்கள் மற்றும் மீனாகாரி வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் பட்டு, பனாரசி பட்டு போன்ற கனமான புடவைகளின் முந்தானையில் இந்த பின்களைக் குத்தும்போது, அது தனித்துவமான பாரம்பரிய அழகை அள்ளித் தரும். திருமணங்கள் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு இதுவே சிறந்த தேர்வு.

நவீன பெண்களைக் கவரும் 'ஸ்டைலிஷ் பட்டாம்பூச்சி' மற்றும் 'இலை' வடிவ புரோச்ச்கள்:

ஆபீஸ் பார்ட்டிகள் மற்றும் மாடர்ன் கெட்-அப் விரும்பும் இளம்பெண்களுக்கு கனமான டிசைன்கள் செட் ஆகாது. அவர்களுக்காகவே இந்த லைட்-வெயிட் 'பட்டாம்பூச்சி' மற்றும் 'இலை' வடிவ புரோச்ச்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

இவை பெரும்பாலும் வெள்ளி அல்லது பிளாட்டினம் ஃபினிஷிங்கில், பளபளக்கும் அமெரிக்கன் டைமண்ட்ஸ் மற்றும் மெல்லிய கிரிஸ்டல் கற்கள் கொண்டு செய்யப்படுகின்றன.

நெட்டட் புடவைகள் , ஜார்ஜெட், ஷிஃப்பான் மற்றும் டிசைனர் புடவைகளுக்கு இந்த பின்கள் மிக நேர்த்தியான, ஒரு 'மாடர்ன் லுக்'கை கொடுக்கும்.

புதுமணப் பெண்களுக்கான பிரத்யேக 'ரூபி & எமரால்டு' குந்தன் பின்கள்:

திருமண மேடையில் மணப்பெண் உடுத்தும் முகூர்த்தப் புடவையின் அழகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல குந்தன் வேலைப்பாடு கொண்ட பின்கள் பெரிதும் உதவுகின்றன.

ராஜஸ்தானி பாரம்பரிய கலையான குந்தன் வேலைப்பாட்டில், சிவப்பு நிற ரூபி மற்றும் பச்சை நிற எமரால்டு கற்கள் பதிக்கப்பட்டு, அடியில் தொங்கும் சிறிய முத்துச் சரங்களுடன் இவை மிகவும் ஆடம்பரமாக காட்சியளிக்கின்றன.

புதுமணப் பெண்கள் தங்களின் திருமண நகைகளுக்குப் பொருத்தமாக இந்த பின்களைத் தேர்வு செய்கிறார்கள். இது மணப்பெண்ணின் முந்தானை மடிப்புகளை அசையாமல் அழகாக நிலைநிறுத்தும்.

வெஸ்டர்ன் மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் ஸ்டைலுக்கான 'காக்டெய்ல்' ஃபெதர் டிசைன்கள்:

இன்றைய ஃபேஷன் உலகில் புடவைகளை இந்தோ-வெஸ்டர்ன் ஸ்டைலில் உடுத்துவது ஒரு புதிய ட்ரெண்ட். அதற்கு ஏற்றவாறு 'காக்டெய்ல் ஃபெதர்' டிசைன்கள் அறிமுகமாகியுள்ளன.

இவை மயில் இறகு அல்லது விண்டேஜ் பறவைகளின் இறகுகள் போன்ற கலைநயமிக்க வடிவங்களில், அடர் நீலம், மரகதப் பச்சை மற்றும் ஊதா நிறக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மாலை நேர பார்ட்டிகள், ரிசப்ஷன் விழாக்களுக்கு உடுத்தும் சாட்டின் புடவைகள், ஃபியூஷன் புடவைகள் மட்டுமின்றி பிளேசர்கள் மற்றும் கௌன்களுக்கும் இதை ஒரு ஸ்டைலிஷ் புரோச்சாகப் பயன்படுத்தலாம்.

தினசரி பயன்பாட்டிற்கான வண்ணமயமான சில்க் த்ரெட் மற்றும் ஹேண்ட்மேட் பின்கள்:

அலுவலகத்திற்கு தினமும் புடவை கட்டிச் செல்பவர்கள் மற்றும் கல்லூரிப் பெண்களுக்கு கனமான பின்கள் செட் ஆகாது. அவர்கள் எளிமையாகவும் பட்ஜெட் விலையிலும் இருக்கும் ஹேண்ட்மேட் பின்களை விரும்புகிறார்கள்.

இவை பட்டு நூல்கள், சிறிய மணிகள் மற்றும் துணி டிசைன்களைக் கொண்டு மிகக் குறைந்த எடையில் கையால் செய்யப்படுபவை ஆகும்.காட்டன் புடவைகள், லினன் புடவைகள் மற்றும் தினசரி அணியும் சாதாரண புடவைகளுக்கு இவை மிகவும் க்யூட்டான மற்றும் சிம்பிளான தோற்றத்தைத் தரும்.

மேலும், இவை புடவையின் நூல்களைக் கிழித்து சேதப்படுத்தாது என்பது இதன் கூடுதல் பிளஸ்.

பியூட்டிஸ்:

வெறும் ஒரு ரூபாய் சேஃப்டி பின்களில் இருந்து தொடங்கி, இன்று ஆயிரக்கணக்கில் விற்கப்படும் பிராண்டட் புரோச்ச்கள் வரை புடவை பின்களின் பரிணாம வளர்ச்சி வியக்க வைக்கிறது.

உங்கள் புடவையின் நிறம், மெட்டீரியல் மற்றும் நீங்கள் செல்லும் விசேஷத்திற்கு ஏற்ப சரியான புடவை பின்னைத் தேர்ந்தெடுத்து அணிந்தால், கூட்டத்திலும் நீங்கள் தான் 'ஸ்டைல் குயின்'!