அழகுக் குறிப்புகள்

மணப்பெண்ணை விட நீங்க அழகா தெரியணுமா? 'ஸ்டெப்-பை-ஸ்டெப்' மேக்கப் பண்றது எப்படினு பாக்கலாம்! வாங்க...

பிரைமர் முதல் செட்டிங் ஸ்ப்ரே வரை...

திருமண நிகழ்வுகளில் மணமக்களுக்கு அடுத்தபடியாக அனைவரின் பார்வையும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தோழிகள் மீதே இருக்கும்.

திருமணக் கொண்டாட்டங்கள் நாள் முழுவதும் நீடிப்பதால், மேக்கப் கலைந்து போகாமல் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஏனோதானோ என்று ரெடி ஆகுவார்கள்.

ஆனால் இனிமேல் அந்த தவறை செய்ய வேண்டாம் அவர்களுக்காவே ஸ்டெப்-பை-ஸ்டெப் மேக்கப் போடுவதற்காகவே இந்த டிப்ஸ் மிகவும் தேவைப்படும் அதனால் இதை செய்வதற்கு மறந்துவிடாதீர்கள்!

முதல் ஸ்டெப்ஸ்! மாய்ஸ்சரைசர் & பிரைமர் :

முதலில் மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவிவிட்டு, சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்து விட்டு தடவ வேண்டும். இது சருமத்தை வறண்டு போகாமல் மென்மையாக வைத்திருக்க உதவும்.

மாய்ஸ்சரைசருக்கு அடுத்தபடியாக பிரைமர் தடவுவது மிக மிக அவசியம். இது முகத்தில் உள்ள சிறு துளைகளை மறைத்து அடுத்தடுத்து போடும் மேக்கப்பிற்கு சீராக அமைய உதவும். இதுதான் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்க அடித்தளமாக அமைகிறது.

பவுண்டேஷன் தேர்வு செய்வது எப்படி?

பொதுவாக மேக்கப்பிற்கு முக்கிய தூணாக அமைவது பவுண்டேஷன் தான். இதை எப்படி பயன்படுத்துவது என்று சிலருக்கு தெரிவதில்லை. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மேட் பவுண்டேஷன்களையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு பவுண்டேஷன்களையும் தேர்ந்தேடுக்க வேண்டும்.

நமது சருமத்திற்கு என்ற பவுண்டேஷனை தேர்ந்தெடுத்துவிட்டு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நமது சருமத்திற்கேற்ப நிறத்தை விட ஒரு லெவல் கூடுதலான பவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிக்குச் சீராகப் பயன்படுத்த வேண்டும். வேர்க்கவிடாமல் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும்.

கலர் கரெக்டர் மற்றும் கன்சீலர்

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அந்த கருமையை மறைக்க கொஞ்சமாக கலர் கரெக்டர் பயன்படுத்த வேண்டும்.

அதன் பிறகு, பவுண்டேஷன் நிறத்தில் இருக்கும் கன்சீலரை கொண்டு முகம் முழுவதும் டச் - அப் செய்ய வேண்டும். இதை அனைத்தும் பாஞ்ச் மூலம் செய்து வந்தால் கைகளிலும் ஒட்டாது. முகத்திலும் ஒரே சீரான பொலிவை நமக்கு தரும்.

ஐ மேக்கப் செய்வது எப்படி?

ஒரு மேக்கபை முழுக்கையாக்குவதே கண்களின் அழகுதான். முதலில் ஆடைகளின் நிறத்திற்குப் பொருத்தமான ஐஷேடோவை டார்க் ஷேட்சை கண்களில் கார்னர்களிலும் லைட் ஷேட்ஸ் மற்ற மற்ற இடங்களில் வைத்து கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக கண்களுக்கு மை வைப்பதை மறந்து விட வேண்டாம். அழகான மையை கொண்டு கண்களின் மேலும் கீழும் அழகாக வரைய வேண்டும். ரிச் லுக் அண்ட் அழகாக தெரியும்.

பிறகு புருவங்களை வரைய வேண்டும் சரியான அளவு வைத்து வரைந்து பிரவுன் கலர் பயன்படுத்தினால் அழகாக தெரியும். கூடுதல் அழகு வேண்டும் என்றால் செயற்கை கண் இமைகளை வைத்துக்கொள்ளலாம்.

நோஸ் கான்டூர் & பிளஷ்

வட்டமான முக அமைப்பை ஒல்லியாகக் காட்டவும், அம்சங்களை கூர்மைப்படுத்தவும் மூக்கு மற்றும் தாடைப் பகுதிகளில் கான்டூர் லைட்டாக பயன்படுத்த வேண்டும். முகம் வடிவமாக தெரியும்.

அதன் பிறகு கன்னங்களின் மேல் பகுதியில் லேசான பிளஷ் மற்றும் ஹைலைட்டர் பயன்படுத்துவதன் மூலம் முகத்திற்கு ஒரு தனித்துவமான பளபளப்பு கிடைக்கும்.

கூந்தல் அலங்காரமும் பூக்களும்

கூந்தலை அயர்னிங், கர்லிங் அல்லது ப்ளோ-டிரையர் செய்வதற்கு முன்பாக 'ஹீட் புரொடெக்ஷன் ஸ்ப்ரே' அடிப்பது கூந்தல் சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. பின்பு தங்களுக்கு பிடித்தபடி ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

ஹேர் ஸ்டைல் முழுமையாக முடிந்த பிறகு, பாரம்பரியத் தோற்றத்திற்கு அசல் பூக்களையும் , நவீனத் தோற்றத்திற்கு ஆடம்பரமான செயற்கைப் பூக்களையும் கொண்டு அலங்கரித்துக் கொள்ளலாம்.

ஃபைனல் செட்டிங் ஸ்ப்ரே

உடைகள், மேக்கப் மற்றும் கூந்தல் அலங்காரம் அனைத்தும் முடிந்த பிறகு, இறுதியாக முகம் முழுவதும் 'மேக்கப் செட்டிங் ஸ்ப்ரே' அடித்துக் கொண்டால் மேக்கப் கலையாமல் அப்படியே இருக்கும். வியர்வையாலோ அல்லது நீண்ட நேரத்தாலோ மேக்கப் கலைந்து போகாமல் நாள் முழுவதும் அப்படியே பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.