SkinTag
அழகுக் குறிப்புகள்

முகம் மற்றும் உடம்பில் இருக்கும் மருக்களை நீக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக..!

கண் இமைகளுக்கு அருகில் உள்ள மருக்களை எடுப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை கட்டாயம்.

பொதுவாக பலருக்கும் கழுத்து, முகம், மற்றும் கண் இமைகளின் மேல் சிறிய தசை வளர்ச்சி போன்ற அமைப்புகள் தோன்றும். இதனை மருத்துவ மொழியில் 'ஸ்கின் டேக்ஸ்' என்றும், தமிழில் 'மருக்கள்' என்றும் அழைக்கிறோம்.

இவை ஆபத்தானவை அல்ல என்றாலும், முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அமைவதால் பலரும் இவற்றை நீக்க விரும்புகின்றனர்.

மருக்களைப் பாதுகாப்பாக நீக்குவதற்கான வழிகளை மருத்துவர்கள் முறையில் பின்பற்ற வேண்டும்.

மருக்கள் ஏன் தோன்றுகின்றன?

உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது, உடல் பருமன், ஹார்மோன் மாறுபாடுகள் மற்றும் மரபணு காரணங்களால் மருக்கள் தோன்றுகின்றன.

ஆடைகள் அல்லது நகைகள் தோலில் அடிக்கடி உரசும் இடங்களிலும் இவை அதிகமாக வளரக்கூடும்.

பாதுகாப்பான மருத்துவ முறைகள்:

மருக்களை வீட்டிலேயே கத்தியால் வெட்டுவதோ அல்லது நூலால் கட்டுவதோ கடுமையான தொற்று மற்றும் ரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். எனவே, தோல் மருத்துவரை அணுகி எளிய சிகிச்சைகள் மூலம் சில நிமிடங்களில் இவற்றை நீக்கலாம்.

கிரையோதெரபி இந்த திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி, மருக்களைக் உறைய வைத்து விட்டால் அவை தானாகவே உதிர்ந்து விழச் செய்யும்.

எலக்ட்ரோகாட்டரி இந்த முறை லேசான மின்சார வெப்பத்தைப் பயன்படுத்தி மருக்களின் வேர்களைச் சுட்டு, தழும்புகள் இல்லாமல் அகற்றும் நவீன முறை.

லேசர் சிகிச்சை லேசர் கதிர்கள் மூலம் துல்லியமாக மருக்களை நீக்கும் எளிய சிகிச்சை முறை. இதில் வலியோ, ரத்தப்போக்கோ இருக்காது. அதனால் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை கேட்க வேண்டும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய இயற்கை வழிமுறைகள்:

மருக்கள் சிறியதாக இருக்கும் பட்சத்தில், சில இயற்கை பொருட்களையும் பயன்படுத்தலாம் ஆனால் இவற்றை கண் இமைகளுக்கு அருகில் உள்ள மருக்களுக்கு இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு சிறிய பஞ்சில் சில துளிகள் ஆப்பிள் சைடர் வினிகரை நனைத்து, மருவின் மீது வைத்து பேண்ட்-எய்ட் போட்டு ஒட்டி வர வேண்டும். இதிலுள்ள அமிலம் மருவை படிப்படியாகக் காயவைத்து உதிரச் செய்யும்.

இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மருக்களை சுருங்கச் செய்யும். தினமும் சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை மருவின் மீது தடவி வரலாம்.

கற்றாழை ஜெல்லுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து இரவு தூங்கும் போது மருவின் மீது தடவி வந்தால், அது இயற்கையாகவே மறையத் தொடங்கும். இதை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

முக்கிய எச்சரிக்கை:

மருக்கள் திடீரென அளவில் பெரிதானாலோ, நிறம் மாறினாலோ அல்லது அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக ஒரு தோல் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது மிகவும் அவசியமாகும்.