பிரபல ஓடிடி தொடரான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' இல் மேக்ஸ் மேஃபீல்ட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் 24 வயதான இளம் நடிகை சாடி சிங்க்.
சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் மார்வெல் நிறுவனத்தின் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தில் 'ஜீன் கிரே' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
தற்போது, அவர் ஆடை வடிவமைப்பில் உலகப் புகழ்பெற்ற பிராண்டான 'கால்வின் கிளைன்' இன் புதிய டெனிம் ஜீன்ஸ் விளம்பர பிரசாரத்தில் இணைந்துள்ளார்.
"ஃபீல் தி ஃபிட்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளம்பர பிரசாரம், தங்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய ஜீன்ஸ் ஆடைகளை அணியும்போது பெண்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட தன்னம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் எய்டன் ஜமீரி இந்த விளம்பரப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த விளம்பரத்தில் சாடி சிங்க், கால்வின் கிளைன் பிராண்டின் புதிய ரக ஜீன்ஸ் ஆடைகளை அணிந்து அன்றாட வாழ்க்கையின் பல்வேறு சுவாரசியமான தருணங்களை எதிர்கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
2001 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பாப் பாடலான "ஐ வான் பி பேட்" என்ற பாடலுக்கு சாடி சிங்க் நடனமாடும் துள்ளலான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
விளம்பரம் குறித்து சாடி சிங்க் பேசுகையில், ஒரு சரியான ஜீன்ஸ் ஆடை, நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதையே மாற்றும் தன்மையுடையது என்று தெரிவித்துள்ளார்.
'90s ஸ்ட்ரெயிட் ஜீன்ஸ் - 90களின் கிளாசிக் ஸ்டைல் வடிவமைப்பு, லோ ரைஸ் பேக்கி ஜீன்ஸ் - தளர்வான மற்றும் வசதியான ஸ்டைல், ஹை ரைஸ் லூஸ் ஜீன்ஸ், அடர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட லூஸ்-ஃபிட் ஜீன்ஸ், டிரக்கர் ஷர்ட் - ஜீன்ஸ் என்று ஜீன்களும் அவற்றுக்கு பொருத்தமான மேலாடைகளும் வடிவமைக்கப்பட்டு வெளியிட்டுள்ளன.